கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன்
கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவை: கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவை வடக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில் படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ALSO READ | கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
தலைமறைவான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். பின்னர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் இருந்து கோவை அழைத்துவரப்பட்டு, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலயில், கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ALSO READ | கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், அத்துடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR