காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., கொரானா பரவலை தடுக்கும் முயற்சியில் இனி காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்



அதேவேளையில் மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம். ஆனால் Swiggy, Zomato, Uber போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி காலை உணவு வழங்க 7.00am - 9.30am, மதிய உணவு வழங்க 12.00pm - 02.30pm மற்றும் இரவு உணவிற்கு 06pm-9.00pm வரை அனுமதிக்கப்படும். 


மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கையாக, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே  செயல்படும்.


இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்., தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது;  கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே; 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.