கள்ள உறவு என்பது எங்களுக்கு கிடையாது... விஜய் பற்றிய கேள்வி - ஹெச். ராஜா அதிரடி பதில்!

H Raja: தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அளித்த பதிலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 30, 2025, 08:51 PM IST
  • சுதந்திரத்திற்கு பின் திமுக அரசு தான் அதிகம் கடன் வாங்கி உள்ளது - ஹெச். ராஜா
  • திமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது - ஹெச். ராஜா
  • ராகுல் காந்தி தேச விரோதி - ஹெச். ராஜா
கள்ள உறவு என்பது எங்களுக்கு கிடையாது... விஜய் பற்றிய கேள்வி - ஹெச். ராஜா அதிரடி பதில்!

H Raja Latest News Updates: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக திட்டங்களை மக்களிடமும், பாஜக நிர்வாகிகளிடமும் தெரிவித்து உரையாற்றினார்.

Add Zee News as a Preferred Source

H Raja: அதிக கடன் வாங்கும் திமுக

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச். ராஜா, "பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் தமிழகத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட உள்ளது. மே 6ஆம் தேதி அன்று திராவிட மாடல் அரசு முற்றுப்பெறும் போது வரும். மாநில அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளை நிறைவேற்றப்படவில்லை.

2020-21ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசின் வருவாய் அதிகரித்த போதிலும் 
4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் வாங்கி உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து திமுக அரசு தான் அதிகம் கடன் வாங்கி உள்ளது. அதில் அதிகம் கொள்ளையடித்து வருகிறது. ஆகவே திமுக அரசு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.

H Raja: கீழடி ஆய்வு குறித்து ஹெச். ராஜா 

கீழடி ஆய்வு பற்றிய கேள்விக்கு கீழடி ஆய்வை ஆர்க்கலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாதான் நடத்தி வருகிறது. இதில் திமுக அரசு வேஷம் கட்டி வருகிறது. தாய்மொழி தமிழை பேச்சு மொழியாக மாற்றிய தீய சக்தி திராவிட மாடல். கீழடி ஆய்வை உலகிற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராகுல் காந்தி தேச விரோதி. அவரைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்பது எனக்கு அவமானமாக உள்ளது. திமுக அரசில் 25 லாக்கப் மரணங்கள் மற்றும் 50 மாதங்களில் 6500 கொலைகள் இதுவரை நடந்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டுமானால் கையாலாகாத திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும்" என்றார்.

H Raja: தவெக உடன் கூட்டணியா?

தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதா என்ற கேள்விக்கு, "திருமணம் நடத்தி குடும்பம் நடத்துகிறார்கள் என்றால் யோக்கியமான விஷயம். பாரதிய ஜனதா கட்சி அவ்வாறு தான் அரசியல் செய்து வருகிறது. கள்ள உறவு என்பது எங்களுக்கு கிடையாது.

H Raja: கலகலத்து போன திமுக

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்தவுடன் கனிமொழி எம்.பி., பதற்றம் அடைகிறார். அவர்கள் கூட்டணியில் உள்ள மதிமுக வைகோ மற்றும் விசிக திருமாவளவன் ஆகியோர் அதிக சீட்டுகள் கேட்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கின்றனர். இது எல்லாம் எதனால் என்றால் எதிர் முகாம் பலமாக உள்ளதால்... திமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது. கூட்டணி கட்சியினரின் டிமாண்டுகள் அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியும், கடம்பூர் ராஜூவும் பாஜகவின் அடிவருடிகள்: புகழேந்தி ஆவேசம்

மேலும் படிக்க | ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழையாகிவிட்டது... சொன்னவர் கடம்பூர் ராஜூ - என்ன விஷயம்?

மேலும் படிக்க | நெல்லை ஆணவக்கொலை: கவின் வழக்கில் முக்கிய திருப்பம்! இந்த விஷயம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News