)
H Raja Supports TVK Vijay: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா நடிப்பில் உருவாகி உள்ள கந்தன்மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (அக். 3) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச். ராஜா கந்தன்மலை திரைப்படம் குறித்து பேசுகையில், "இது ஒரு சமூக திரைப்படம். திருப்பரங்குன்றம் பிரச்சனையும் அதில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற ஒரு படம். ஆகவே இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
தொடர்ந்து கரூர் அசம்பாவிதம் குறித்து பேசிய அவர், "இப்போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கும் ஹாட் டாபிக் கரூரில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இதை விசாரிப்பதற்கு மாநில அரசு ஒரு நீதியரசர் ஆணையம் அமைத்துள்ளது. அதை வரவேற்கலாம் என்று நினைக்கும்போது, மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்குவது என்று மாநில அரசு செயல்படுமானால் எதற்கு அந்த ஆணையத்தை அமைக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "உண்மை வெளியே வரவேண்டும், இதுவரைக்கும் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கை மோசமானதாக இருக்கிறது.
அது விஜய்யின் முதல் கூட்டம் அல்ல ஆறாவது கூட்டம், ஆறாவது கூட்டத்தை 20 அடி அகலம் சந்திலா அனுமதி கொடுப்பது. இன்று கரூரில் இருக்கும் நிர்வாகம் எஸ்பி எந்த மாதிரி ஒரு நபர் பக்கத்தில் இருக்கின்ற டவுன் பஞ்சாயத்து 15வது வார்டில், இரண்டு நாட்களாக தண்ணீர் வரவில்லை என கவுன்சிலரிடம் ரவி புகார் அளிக்கிறார், அது என்ன தவறா?
வேங்கைவயல் சம்பவம் மலத்தை கலந்தவனை கண்டுபிடிக்காத ஒரு தகுதியற்ற அரசுதான் இன்று தமிழகத்தில் உள்ளது. வீட்டுக்குள் புகுந்து கவுன்சிலர், கவுன்சில சகோதரர், கவுன்சிலர் தந்தை ஆகியோர் புகார் அளித்த ரவி என்பவரை கொடூரமாக தாக்கியுள்ளனர், அந்த மாதிரி ஒரு கொலை முயற்சி கரூரில் நடந்துள்ளது.
சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி பக்கம் தான், முதல்வர் கரூருக்கு விரைகிறார். முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்றுப் போய்விட்டார், அன்பில் மகேஷ் முன்... பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடல் பாடினால் என்ன தவறு ? இடம் கொடுத்ததே பழுதான நோக்கம்
விஜய் மீது நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்ற நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது?. விஜய் என்ன தவறு செய்தார்? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் கூட பொதுமக்கள் அதுவரை காத்திருந்து அவரை பார்த்துச் செல்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா? வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். அது கிரிமினல் குற்றம் இல்லை.ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வேங்கைவயலுக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா?. ஆளும் திராவிட அரசுக்கு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் அவர்? திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார்" என சாடினார். முன்னதாக, திமுக அரசும், காவல்துறையும் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்றும் அரசு அச்சப்படுகிறதா என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ