திமுகவின் கட்சி பதிவு அபாயத்தில் இருக்கு... ஹெச். ராஜா திடீர் எச்சரிக்கை - என்ன மேட்டர்?

H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2025, 06:54 AM IST
  • மதுரையில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்
  • ஹெச். ராஜா இதில் பங்கேற்றார்.
  • அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகவின் கட்சி பதிவு அபாயத்தில் இருக்கு... ஹெச். ராஜா திடீர் எச்சரிக்கை - என்ன மேட்டர்?

H Raja Latest News Updates: கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி திமுக அரசை கண்டித்தும் மதுரை மாநகர பாஜக சார்பில் புதூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (நவ. 6) நடைபெற்றது. 

Add Zee News as a Preferred Source

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா கலந்து கொண்டார். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

H Raja: சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, "கோயம்புத்தூர் பயங்கரவாதிகளின் புகழிடம். கோவையில் அத்வானி வரும்போது குண்டு வைத்து பல பேரை கொன்றார்கள். எல்லாத் தீய சக்தியையும் பாதுகாக்கும் அரசு திமுக. இது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இல்லை. ரஜினிகாந்த் சொன்னது போல் தமிழ்நாட்டில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டிய ஆர்ப்பாட்டம்" என்றார்.

H Raja: போலீசார் அறிக்கையில் முரண்

தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்து செய்தியாளர்களை ஹெச். ராஜா, "தமிழகத்தில் ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறை உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஒருவர்தான் இருந்தார்கள் என்று சொன்னார்கள், அதையே நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நடக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இரண்டு பேர் என்கவுண்டர் செய்தாலும், இந்த வழக்கு முடியவில்லை என கூறி சிபிஐ வசம் அதை ஒப்படைத்திருக்கிறது. 

அதேபோன்று அஜித்குமார் கொலை வழக்கில் அரசாங்கமே முன்வந்துதான சிபிஐயிடம் ஒப்படைத்தீர்கள். அதேபோன்று இந்த வழக்கையும் அரசாங்கமே சிபிஐயிடம் ஒப்படைக்கலாமே என்ன தடுக்கிறது?. கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. முதலில் காவல்துறை அதிகாலை 3 மணிக்கு ஆண் நண்பரிடம் இருந்து தகவல் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் ஆணையாளர் சொன்னபோது 11.20 தகவல் வந்தது, இரவு 11:35 மணிக்கு ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டோம், நூறு பேர் சென்று தேடினோம் என்கிறார்.

H Raja: 100 பேர் தேடியும் ஏன் கண்டுபிடிக்கவில்லை?

100 பேர் தேடியும் ஏன் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே காவல்துறையினுடைய அறிக்கைகள் நம்பிக்கை தருவது போன்று இல்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார். 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் என்பது ஆண்டுக்கு 2 ஆயிரமாக ஆக இருந்தது, ஆனால் இப்போது 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

4 மாதத்தில் எப்படியும் திமுக அரசு வீட்டிற்குதான் போகப் போகிறது. இப்போதே ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டு போனால் கௌரவமாக இருக்கும். இந்த நான்கரை ஆண்டில் ஸ்டாலின் அரசாங்கத்தில் 6,200 படுகொலைகள் நடந்துள்ளன, காவல் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர், இதெல்லாம் முதல்வருக்கு மண்டையில் ஏறவில்லை" என கடுமையாக சாடினார்.

H Raja: SIR முதல் முறை நடக்கவில்லை...

தேர்தல் ஆணையம் வாக்கை திருடுகிறது என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, "முதல்வர் நிதானமாக பேச வேண்டும், வார்த்தை சரியாக பிரயோகிக்க வேண்டும். எஸ்ஐஆர் என்பது முதல் தடவை நடக்கிறதா? இதுவரை 10 முறை நடந்துள்ளது. 2003ஆம் ஆண்டில் நடந்துள்ளது, 197 தொகுதிகளிலும், 2005ஆம் ஆண்டில் மீதம் உள்ள 37 தொகுதிகளில் நடந்துள்ளது. இது எப்போதும் நடக்க கூடியதுதான். தலைமை தேர்தல் ஆணையர் 12 மாநிலத்திற்கும் சேர்த்து சொல்லி இருக்கிறார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு BLA2 முகவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை ஒழுங்காக வேலை பார்க்கச் சொல்லுங்கள்.

H Raja: கட்சி பதிவு அபாயத்தில் உள்ளது 

மத்திய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இதனை அணுகுகிறது. தேர்தல் ஆணையம் என்பது தனித்துவ அமைப்பு, ஒரு கட்சிக்கு அங்கீகாரம் வாங்கும்போது நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்போம் என சொல்லி எழுதி கொடுத்து விட்டுதான் திமுக அங்கீகாரம் வாங்கி இருக்கிறீர்கள். அதனை மீறுவீர்களேயானால் உங்களுடைய கட்சி பதிவு அபாயத்தில் உள்ளது. இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும்" என பதிலளித்தார்.

H Raja: 'விசிக சட்ட விரோத அமைப்பு'

வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "வீணா போறது என முடிவு செய்துவிட்டால் யார் தடுக்க முடியும்?. இது எப்படிப்பட்ட நிர்வாகம் என்பது தெரியும். இந்த மதுரையில் விசிக கூட்டம் போட்டு பிரதமருடைய வாகனத்தை தாக்குவேன் என பேசியுள்ளனர். மதுரை காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ஏன் அந்த நபரை இதுவரை கைது செய்யவில்லை?. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது சட்டவிரோத அமைப்பு என்பது தெரிகிறதா? பிரதமர் வண்டியை தாக்குவது என்பது சட்டவிரோதம் தானே, புரிந்து கொண்டு மக்களிடம் இதனை கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.

H Raja: பிடிஆர் முதல்வருக்கு கொடுத்த சான்று...

எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட எனது ஏரியா நல்லா இருந்தது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்த கேள்விக்கு, "அதிமுக ஆட்சியில் இருந்தபோது நல்லா இருந்தது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லி இருக்கிறார், அது ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கின்ற சான்று. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தின் மா.சுப்ரமணியன் நண்பர் சார் என்றார். ஆனால் அந்த சார் இல்லவே இல்லை என்றார்கள், இப்போ SIR என்றவுடன் முதலமைச்சருக்கு ஜீரம் வந்துவிடுகிறது" என்றார். தனியரசு திமுகவிற்கு சென்று பேசியது குறித்த கேள்விக்கு, "திமுகவிற்கு போனால் அடிமை சாசனம் கையெழுத்து போட்டுவிட்டு தான் போக வேண்டும், அதனால் தனியரசு அப்படி பேசுகிறார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்" என்றார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பாஜகவுக்கு போட்டியாக யாரும் இல்லை - நயினார் நாகேந்திரன்

மேலும் படிக்க | கோவை மாணவி பாலியல் சம்பவம் - சந்தேகத்தை கிளப்பிய நயினார் நாகேந்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News