விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Nov 10, 2025, 04:07 PM IST
  • விவசாயிகளுக்கு 50% மானியம்!
  • எளிதாக்கிய தமிழக அரசு!
  • முழு விவரம் இதோ.
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!

தமிழ்நாட்டில் விவசாய துறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், 'வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம்' என்ற சிறப்பு திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை வாங்க 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், மானியம் வழங்கும் முறையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

யாருக்கு எவ்வளவு மானியம்?

  • இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வெவ்வேறு அளவுகளில் மானியம் வழங்கப்படுகிறது.
  • 2.5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகள் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும்.
  • பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் 50% மானியம் உண்டு. இவர்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 20% மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • மேற்கண்ட பிரிவுகளில் வராத மற்ற விவசாயிகளுக்கு, இயந்திரத்தின் விலையில் 40% மானியமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் வேளாண் இயந்திரங்களுக்கான வாடகை மையங்களை அமைக்க 80% வரையும், வட்டார அளவில் மையங்கள் அமைக்க 40% வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

புதிய நடைமுறை

முன்பு, ஒரு விவசாயி மானியத்தில் ஒரு கருவியை வாங்க வேண்டுமென்றால், அதற்கான முழு தொகையையும் செலுத்தி, கருவியை வாங்கிய பின்னரே, மானிய தொகை அவரது வங்கி கணக்கிற்கு வரும். இதனால், முழுத் தொகையையும் திரட்ட முடியாமல் பல விவசாயிகள் சிரமப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இனி, விவசாயிகள் தங்களது பங்களிப்பு தொகையை மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள மானிய தொகையை, அரசே நேரடியாக அந்த இயந்திரத்தை விற்கும் நிறுவனத்திற்குச் செலுத்திவிடும். இந்த மாற்றம், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் நிதிச் சுமையை வெகுவாகக் குறைத்துள்ளது.

என்னென்ன இயந்திரங்களுக்கு மானியம்?

உழவு பணியில் தொடங்கி, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் வரை பலவிதமான இயந்திரங்களுக்கு இத்திட்டத்தில் மானியம் பெறலாம். டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகள், கதிரடிக்கும் இயந்திரங்கள், கரும்பு சோகை அரைக்கும் கருவிகள், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான மாவு அரைக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு போன்ற பல கருவிகள் இந்த பட்டியலில் அடங்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது ஸ்மார்ட்போனில் 'உழவன்' செயலியை (Uzhavan App) பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா, பட்டா மற்றும் புகைப்படம் ஆகியவை முக்கிய தேவையான ஆவணங்கள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு சென்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: ஒச்சேரி சுயம்புநாதர் கோவில்: பாலாலயம் நிறைவு, பக்தர்கள் மகிழ்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News