)
வங்க கடலில் மோந்தா புயல் உருவாகியது என்றும் அது தீவிர புயலாக நாளை மறுநாள் (அக்டோபர் 28) மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்டோபர் 26) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 10 மணி வரை எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தின் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த சூழலில், மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் வெளியே செல்லும் பட்சத்தில் கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ