TN Weather Update: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்கு பகுதி புயலாக மாறி இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் நல்ல மழையை கொடுத்து வந்தது. குறிப்பாக இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், 200க்கும் மேலானோர் உயிரிழந்தனர் தமிழகத்தில் நல்வாய்ப்பாக அத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. இந்த சூழலில், டிசம்பர் 02 ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் மழையானது தொடர்ந்து வருகிறது.
Heavy Rain Alert: இன்று கனமழை எங்கெல்லாம்?
இந்த சூழலில், இன்று (டிசம்பர் 05) தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக நேற்று (டிசம்பர் 04) வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பில், இன்று (05-12-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Chennai Weather Today: சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னையை பொறுத்தவரையில், இன்று (05-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
TN Rain Alert: காலை 7 மணி வரை
மேலும் இன்று காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைகாலில் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weatherman Pradeep John: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இனி கனமழைக்கான அச்சம் இருக்காது என்றும் கூறி இருந்தார். இது தொடர்பாக நேற்று (டிசம்பர் 04) அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவி, இன்று இரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை (டிசம்பர் 05) குறைந்த நேரம் மட்டுமே மழை ஒஎய்ய வாய்ப்புள்ளது.
டிச.09, 10ல் மழைக்கு வாய்ப்பு
தேனி, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவாகி இருக்கிறது. கனமழையானது எங்கும் பதிவாகவில்லை. நாளை (டிசம்பர் 05) சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி கனமழைக்கு வாய்ப்பில்லை. எனவே நம்முடைய அன்றாட வேலைகளை நாம் தொடங்கலாம். டிசம்பர் 09 மற்றும் 10ஆம் தேதி தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சென்னை மற்றும் அதனை ஒட்டிய வட மாவட்டங்களில் இது மழையை கொடுக்குமா? அல்லது இத்துடன் மழை முடிவடைகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன்: இந்த 2 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









