48 மணி நேரத்திற்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை!!
அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
அதேவேளையில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.