)
Chennai Rains Latest News Updates: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இரவு நேரத்தில் சென்னையின் நகர் பகுதியிலும், புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் மழை பெய்தது.
தொடர்ந்து, புறநகர் பகுதிகளான திருவேற்காடு, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், வானகரம், திருமுல்லைவாயல் ஆகிய புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் மட்டுமின்றி செங்கப்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரம், மதுராந்தகம், மறைமலைநகர், திருக்கழுங்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், மேடவாக்கம், பல்லாவரம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில் இன்று மாலை போட்ட பதிவில், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை கொடுக்கும் மேகங்கள் இப்போது இங்கே... தற்போது காஞ்சிபுரத்தைக் கடந்து வலுவடைந்து வருகின்றன. சென்னையின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யும். மேகங்கள் நீண்ட தூரம் நீண்டு, பாண்டிச்சேரி மற்றும் கடலூரில் கூட சிறிது சிறிதாக மழை பொழிவு இருக்கும், மழையை கொண்டாடுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
Red Thakkalis coming in ripe towards KTCC
— Tamil Nadu Weatherman (@praddy06) August 17, 2025
-----------------
The daily KTCC (Chennai) storms are here. Right now crossing Kancheepuram and gaining strength. Many parts of Chennai will get rains tonight.
The storms are stretching for a long distance even Pondy and Cuddalore will… pic.twitter.com/fOj9gbE0tU
இதைத் தொடர்ந்து அவர் இரவு 8 மணியளவில் போட்ட மற்றொரு பதிவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற தரவுகள் அடங்கிய பட்டியலின் புகைப்படங்களையும் பதிவேற்றியிருந்தார். அதன்படி, இன்று மாலை 7.30 மணி நிலவரப்படி, சென்னையை பொருத்தவரை காசிமேட்டில் 49.5 மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை பரந்தூரில் 21.2 மில்லி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூரில் 25.6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த பதிவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் மற்றொரு முறை நல்ல மழை பெய்திருக்கிறது. தற்போதைய சிறு சிறு தூறல்கள் புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். தினமும் இந்த 4 மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Another superb rains in many parts of KTCC. Now nara nara drizzles will continue from leftover stratiform in Southern suburbs and Chengalpet district areas.
— Tamil Nadu Weatherman (@praddy06) August 17, 2025
This trend of daily rains at some parts of KTCC will continue. Other parts of leeward areas are mostly calm and dry. pic.twitter.com/ndrgg7IRNl
தமிழ்நாட்டை பொருத்தவரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஆகஸ்ட் 17) காலை 8.30 மணிக்கு உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாலையில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ