)
Tamil Nadu Rain Forecast Latest News Updates: தமிழ்நாட்டின் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதியை ஒட்டி, ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்; தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஇஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாளைய (ஆகஸ்ட் 23) வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்; மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Centuries after a long gap in Chennai! Now blazing sun on after the rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) August 22, 2025
-------------------------
Here’s the 24-hr rainfall accumulation at 8:30 am on 22.08.2025 captured on radar. A perfect spell for Chennai city and the ECR belts. pic.twitter.com/i9fWL32VK3
நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையிலான நிலவரப்படி, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 15வது மண்டலத்தில் 119.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து ஈஞ்சம்பாக்கம் 15வது மண்டலத்தில் 106.5 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது, ராஜா அண்ணாமலைபுரம் 13வது மண்டலத்தில் 105.9 மில்லி மீட்டர் மழை பெழிவு பதிவாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ