தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், இன்று (மார்ச் 11) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த தமிழ் சீரியல்! எது தெரியுமா?
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் இன்று (மார்ச் 11) முதல் வரும் 17 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று (மார்ச் 11) தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதேபோன்று சிவகங்கை, தஞ்சை, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று (மார்ச் 11) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை புதன்கிழமை நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மழை தொடரும்
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: சர்க்கரை அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









