)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு உட்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடக்கிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை இராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் திருச்சி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கனமழை பெய்து வருவதால், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலை பகுதிகளிலும் தண்ணீர் தேங்க அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ