இந்துக்களாக இருந்தவர்கள் தான் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளனர். அனைவரும் ஒன்றுதான், தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது - அமைச்சர் ஐ . பெரியசாமி பேட்டி!

திண்டுக்கல்லில் தனியார் பள்ளி 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மிதிவண்டி கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று 21.06.25 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடிக்கு புகழ் சேர்த்தது முதலமைச்சர் ஸ்டாலின் தான். கீழடி ஆராய்ச்சி செய்து தரவுகளைக் கொண்டு வந்து மக்கள் பார்ப்பதற்கும், தமிழக பண்டைய நாகரிக கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளவும், பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அகழ் வாராய்ச்சிகளையும் சிறப்பாக செய்து வருபவர் முதல்வர். குழந்தை தற்போது பையனாக மாறிவிட்டது. அகழ்வாராய்ச்சி என்றால் முதல்வர் ஸ்டாலின் தான். திமுக தற்போது பயந்து உள்ளது என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, எந்த பயமும் இல்லை. மக்களுக்கு தான் சேவை செய்கிறோமே தவிர கண்ணுக்குத் தெரியாதவர்களுக்கு சேவை செய்ய தயாராக இல்லை. மத்திய இணை அமைச்சர் முருகன் மக்களை சந்திக்கவில்லை. அவர்களுக்கும், பிஜேபிக்கும், மக்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மத்திய அரசு என்ன செய்கிறது என அனைவருக்கும் தெரியும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பின் தங்கிய மக்களை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். தற்போது 4 மாதத்திற்கு பின்பு 2900 கோடி கொடுத்துள்ளனர். இன்னும் 1800 கோடி வர வேண்டி உள்ளது.
அடுத்த மாதம் முதல் முதல்வர் இத்திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்துவார். பாஜகவை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. பாஜக அரசு கடவுள், இந்துக்கள் என இனப்பிரச்சாரத்தை எடுக்கின்றனர். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்துக்களாக இருந்தவர்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளன அனைவரும் ஒன்றுதான். இந்தியாவைப் பொறுத்தவரை மும்மதமும் ஏற்றுக்கொண்ட மதம். அனைவரும் அண்ணன் தம்பிகளாகவும் உறவினர்களாகவும் வாழ்கின்றனர். வேறுபாட்டை யாராலும் ஏற்படுத்த முடியாது. தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது. மாநாடு நடத்தினால் சரியானதா? முருகனுக்காக என்ன செய்தார்கள். திமுக அரசு மூவாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளது. முருகன் பெயரில் கல்லூரிகள் தொடங்கியுள்ளோம்.
இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைத்து மதங்களுக்கும் திட்டங்களை ஒதுக்கியுள்ளது திமுக அரசு. பாஜகவிற்கு வேலை இல்லை. மகளிர் காண உதவித்தொகை, கலைஞர் கனவு இல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொடுத்துள்ளோம். பாஜக என்ன கொடுத்துள்ளது. கல்வி நிதியே தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை. அடிப்படைக் கல்விக்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தரவில்லை. எந்த அடிப்படையில் மக்களை சந்திக்க முடியும். பாஜக அரசிற்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து வருவது குறித்த கேள்விக்கு, கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கருத்துகள் கூறலாம். கொள்கையில் விளைகிறது கூட்டணி. தனிப்பட்ட கருத்துக்கள் அரசைக் குறை கூறுவதாக சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் நான் தவறு செய்ததாக கூறலாம் அரசாங்கத்தை தவறு செய்ததாக கூற முடியாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ