BJP-AIADMK Alliance? சென்னை வந்திருக்கக்கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த தமிழக பாஜகவின் தலைவர் யார்? வரும் தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கலாம் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என ஏற்கனவே அரசியல் நோக்கர்கள் கூறினர். அந்த வகையில் இந்த ஆலோசனை என்பது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11:30 மணி அளவில் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்றார். சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின்பும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் உடன் இருக்கின்றனர்.
குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக நிர்வாகிகளுடன் மிக நெருக்கத்தில் இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், டிடி தினகரன், சசிகலா மற்றும் பல அதிமுக முக்கியத் தலைவர்களுடன் நல்ல ஒரு தொடர்பில் இருக்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், ஒருங்கிணைந்த அதிமுக உடனான கூட்டணி சேர்ந்து 2024 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றுவது குறித்தான பேச்சு வார்த்தையும் நடைபெற்றது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்றதன் மூலம் குருமூர்த்தி முக்கியஸ்தராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். இந்நிலையில் இன்று காலை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று அவருடைய தந்தை மறைவிற்கு நேரில் ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்றார். அங்கு உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதாவது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்
மேலும் படிக்க - அமித்ஷா சென்னை வருகை ஏன்? தலைவர் மாற்றம் இருக்குமா? - அண்ணாமலை பதில்!
மேலும் படிக்க - மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தைக்காக உருகிய தமிழசை சௌந்தரராஜன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









