How Change Name On Your Electricity Connection: வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது என புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததால், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, சில மாற்றங்களை செய்து, பொது மக்கள் சிரமம் இல்லாமல் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதன்காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டது. எனவே தமிழ்நாடு வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் (Name Change) மற்றும் அதற்கான கட்டணம் (Fees) பற்றிய விவரங்களை பார்ப்போம்.
மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் கட்டணம்:
தாழ்வழுத்தப் பிரிவு (Low Tension - LT) வீட்டு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றத்திற்கான கட்டணம் சமீபத்திய தகவலின்படி, ரூபாய் 645 ஆக வசூலிக்கப்படுகிறது. (மின் வாரியத்தின் சேவைக் கட்டணங்கள் அவ்வப்போது திருத்தப்படலாம். எனவே, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அலுவலகத்தில் உறுதிப்படுத்துவது நல்லது.)
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தற்போது பெயர் மாற்ற சேவையை முழுவதுமாக ஆன்லைனில் வழங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. நீங்கள் TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்:
நீங்கள் எந்தக் காரணத்திற்காக பெயர் மாற்றம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் மாறுபடலாம்.
சொத்து உரிமை ஆதாரம் (ஏதேனும் ஒன்று)
விற்பனைப் பத்திரம் (Sale Deed)
பரிசுப் பத்திரம் (Gift Deed)
குத்தகை ஒப்பந்தம் (Lease Agreement)
சமீபத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது (Property Tax Receipt)
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
முந்தைய உரிமையாளரின் கடைசி மின் கட்டண ரசீது (Electricity Bill)
முந்தைய உரிமையாளர் இறந்துவிட்டால்: மரணச் சான்றிதழ் (Death Certificate) மற்றும் வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)
முக்கியமான மாற்றம்:
முன்னர் தேவைப்பட்ட, முந்தைய உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் பெறும் படிவம் 2 (Form 2) ஐ இனி நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் தகவல்:
சொத்து விற்பனை, பரிசளிப்பு போன்ற சமயங்களில் பெயர் மாறுதலுக்கு, ஒப்பந்தக் கடிதம் (Indemnity Bond / Compensation Bond) கூடுதல் ஆவணமாக அளிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். குடும்பத்தில் மின் இணைப்பு பெற்ற நபர் இறந்தால், வாரிசு சான்றிதழ் அல்லது அண்மையில் பெறப்பட்ட சொத்து வரி ரசீதை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.
மின்சாரம் தொடர்பான புகார்:
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு, உதவி எண் (1912) அல்லது வாட்ஸ்அப் மூலம் (94458508111) என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
மேலும் படிக்க - உங்க வீட்ல மின்கட்டணம் அதிகரித்துள்ளதா? இதை மட்டும் பண்ணுங்க.. ரொம்ப கம்மியாகும்
மேலும் படிக்க - மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு... அன்புமணி போட்ட திடீர் குண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









