)
Tamil Nadu Parliamentary Constituencies List For Lok Sabha Elections 2024: இந்த ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் ஜனநாயகத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது? அதில் எத்தனை தனித் தொகுதிகள் உள்ளன? என்பதைக் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் (39) முழு விவரம்
தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Constituency) உள்ளன. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
1. திருவள்ளூர் (Thiruvallur)
2. வட சென்னை (Chennai North)
3. தென் சென்னை (Chennai South)
4. சென்னை சென்ட்ரல் (Chennai Central)
5. ஸ்ரீபெரும்புதூர் (Sriperumbudur)
6. காஞ்சிபுரம் (Kancheepuram)
7. அரக்கோணம் (Arakkonam)
8. வேலூர் (Vellore)
9. கிருஷ்ணகிரி (Krishnagiri)
10. தருமபுரி (Dharmapuri)
11. திருவண்ணாமலை (Tiruvannamalai)
12. ஆரணி (Arani)
13. விழுப்புரம் (Villupuram)
14. கள்ளக்குறிச்சி (Kallakurichi)
15. சேலம் (Salem)
16. நாமக்கல் (Namakkal)
17. ஈரோடு (Erode)
18. திருப்பூர் (Tiruppur)
19. நீலகிரி (Nilgiris)
20. கோயம்புத்தூர் (Coimbatore)
21. பொள்ளாச்சி (Pollachi)
22. திண்டுக்கல் (Dindigul)
23. கரூர் (Karur)
24. திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)
25. பெரம்பலூர் (Perambalur)
26. கடலூர் (Cuddalore)
27. சிதம்பரம் (Chidambaram)
28. மயிலாடுதுறை (Mayiladuturai)
29. நாகப்பட்டினம் (Nagapattinam)
30. தஞ்சாவூர் (Thanjavur)
31. சிவகங்கை (Sivaganga)
32. மதுரை (Madurai)
33. தேனி (Theni)
34. விருதுநகர் (Virudhunagar)
35. ராமநாதபுரம் (Ramanathapuram)
36. தூத்துக்குடி (Thoothukkudi)
37. தென்காசி (Tenkasi)
38. திருநெல்வேலி (Tirunelveli)
39. கன்னியாகுமரி (Kanyakumari)
தமிழ்நாட்டின் தனி தொகுதிகள் (7) விவரம்
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தனித்தொகுதிகள் உள்ளன. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
1. திருவள்ளூர் (எஸ்சி)
2. காஞ்சிபுரம் (எஸ்சி)
3. விழுப்புரம் (எஸ்சி)
4. நீலகிரி (எஸ்சி)
5. சிதம்பரம் (எஸ்சி)
6. நாகப்பட்டினம் (எஸ்சி)
7. தென்காசி (எஸ்சி)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ