)
scholarship : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் 15.08.2025 நாளிலிருந்து இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இதில் ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் 2024-2025-ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள நோடல் அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS -University Management Information System (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய மாணாக்கர்கள் கீழ்காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
1. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
2. வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணையச் சான்றுகளாக இருத்தல் அவசியம். இணையச் சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
3. மாணாக்கரின் ஆதார் எண்ணுடன் மாணாக்கர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும். அவ்வங்கிக் கணக்கு செயல்பாட்டில் (Active) உள்ள கணக்காக இருக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆதிதிராவிடர், கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களின் கீழ்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (SC/ ST)
2. மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (SCC)
3. உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம் (அரசு / அரசு உதவி பெறும் / ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும்)
4. கற்பிப்புக் கட்டணம் சலுகைத் திட்டம் (Tuition Fee Concession Scheme) (அரசு / அரசு உதவி பெறும் / ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள்/ பல்கலைகழகங்கள் மட்டும்)
5. பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் திட்டம் (Free Education upto UG) (அரசு / அரசு உதவி பெறும் / ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும்)
6. முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் திட்டம் ( Free Education upto PG (Girls)) (அரசு / அரசு உதவி பெறும் / ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும்)
கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ