Tamil Nadu Govt : அனுமதி பெறாத வீட்டு மனைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பது குறித்த தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Tamil Nadu Govt Unauthorized residential plots Permission : தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் போடப்பட்ட வீட்டுமனைகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அனுமதி அளித்த குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாது, அத்தகைய வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தார். அதற்கு வெப்சைட்டும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் இன்னொரு அப்டேட்டாக, அனுமதி பெறாத மனைகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க புதிய வெப்சைட் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண். 05-ல் "20.10.2016 முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்குமுன் பதிவுசெய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும், இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்" என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும், திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர் புறவளர்ச்சித் துறை அரசாணை எண். 70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது போன்று, மலையிடப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tn.hillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ