Tamil Nadu land survey online : தமிழ்நாடு அரசு மக்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து துறைகளையும் வேகமாக டிஜிட்டல்மயமாக்கிக் கொண்டு வருகிறது. அந்தவகையில் நில அளவீடு செய்ய மக்கள் இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைப் பார்த்து விண்ணபிக்க வேண்டியிருந்தது. அதற்காக கடந்த ஆண்டே ஆன்லைன் முறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததிருந்தது. அதாவது நிலம் அளவீடு செய்ய மக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் அவர்களின் நிலம் அளக்க வரும் தேதி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு செல்லும். இந்த வசதியை பெரும்பான்மையாக மக்கள் பயன்படுத்துவதில்லை.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்நிலையில் நிலங்களை அளவீடு செய்யக்கோரி மக்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பித்து வந்த நிலையில் வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நிலம் அளவீடு எப்போது?
நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சூப்பரான திட்டங்களில் இதுவும் ஒன்று.
மேலும் படிக்க | TN Govt | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 முக்கிய உத்தரவு!
மேலும் படிக்க | பத்திரப்பதிவு துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசு... ஒரே நாளில் இவ்வளவு வருமானமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









