Tamil Nadu Government : கல்லூரி படிப்பை தொடர்வதற்கு PM வித்யா லட்சுமி போர்டல் (https://pmvidyalaxmi.co.in) மூலமாக கல்விக் கடன் பெறலாம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் கல்விக் கடன் பெற்று உயர்கல்வி படிப்பை தொடர முடியும். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு வங்கிகளில் கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம் என கூறியுள்ளார்.
கல்விக் கடன் பெற விண்ணபிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்விக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நிதி தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, அரசு ஊக்குவிக்கும் வகையில் PM வித்யா லட்சுமி போர்டல் (https://pmvidyalaxmi.co.in) மூலமாக கல்விக் கடன் பெறலாம். மாணவர்கள் இந்த போர்டலில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வங்கிகளில் சமர்ப்பித்து, தங்களுக்கான கல்விக் கடனை பெற முடியும். உள் நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கவும் கடன் வழங்கப்படும். மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விதமான மேற்ப்படிப்புக்கும் கடன் பெறலாம். கல்விக் கடனை மாணவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறலாம்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் தேதி
கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்கள்
மாணவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு ஆன்லைன் (https://pmvidyalaxmi.co.in/) வாயிலாக கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்கள் மாணவர் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆதார், வருமான வரி அட்டையின் நகல், மாணவரின் 10,11,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாணவரின் 12 ஆம் வகுப்பு மாற்று சான்றிதழ், மாணவரின் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மாணவர் முதல் பட்டதாரி என்றால் முதல் பட்டதாரி சான்றிதழ், தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான சான்று (மெரிட் அட்மிசன்-கவுன்சிலிங் சர்டிபிக்கட்), கல்லூரியில் பயில்வதற்க்கான போனஃபைட் சான்றிதழ், கல்விக்கட்டண விவரங்கள் (அனைத்து ஆண்டிற்கும் முழு விவரத்துடன்) போன்ற ஆவணங்கள் மூலம் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கடன் வரம்பு
கல்விக்கடன் வரம்பீடு, ரூ.4.00 இலட்சம் வரை உள்ள கடனுக்கு எந்தவிதமான அடமானம் மற்றும் ஜாமீன் தேவையில்லை. ரூ.4 இலட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.7.5 இலட்சத்திற்குள் உள்ள கடனுக்கு, மூன்றாம் நபர் ஒருவர் ஜாமீன்தாராக இருக்க வேண்டும். ரூ.7.5 இலட்சத்துக்கு மேல் கடனுக்கு, அசையும் அல்லது அசையாத சொத்துகளை அடமானமாக வைக்க வேண்டும். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, PM வித்யா லட்சுமி போர்டல் மூலம் விரைவில் விண்ணப்பித்து, தங்களது கல்விக்கடனைப் பெற்றுத் தங்கள் உயர்கல்வியைத் தொடர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









