)
Anbu Karangal Scheme : பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கும் மாபெரும் திட்டம் தான் அன்புகரங்கள் திட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 2023 ஆம் ஆண்டு இதே நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், இந்த ஆண்டு அன்புகரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 வீதம் அவர்கள் 18 வயது பூர்தியாகும் வரை தமிழ்நாடு அரசு இந்த உதவித்தொகையை கொடுக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின் அக்குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருத்தல் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். மேலும், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் குழந்தைகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிரத்யேகமான விண்ணப்ப படிவம் எதுவுமில்லை. 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய கருணை மனுவை எழுதிக் கொடுத்தால் போதுமானது. உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலேயே மனு கொடுக்கலாம். அல்லது திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுக்கலாம். மேலும், நேரிடையாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்.
பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் உரிய ஆவணங்களுடன் இந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம். குழந்தைகளை நேரில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. கொடுக்கப்பட்ட மனு மீது மீது கள விசாரணை செய்து, முன்னுரிமைப்படி உதவித் தொகையானது வழங்கப்படும். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் :
1.தந்தை (or) தாய் இறப்புச் சான்றிதழ்
2.ஆதார் அட்டை
3.ரேஷன் கார்டு
4.கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வருமானவரிச் சான்று குறிப்பாக 40,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய்க்குள் இருக்குமாறு பெறப்பட வேண்டும். நகரங்களில் வசிப்பவர்களுக்கு 72,000 ரூபாய் முதல் 96,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்த சான்று ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
5.ஜாதி சான்றிதழ்
6. குழந்தைகளின் ஏதேனும் ஒரு பெற்றோர் இருப்பின் அவருடைய வாக்காளர் அட்டை இணைக வேண்டும்.
7.வாரிசு சான்று
8.விதவை சான்று
9 இருப்பிட சான்று அல்லது பிறப்பிட சான்று
10.குழந்தைகளின் ஆதார் கார்டு
11. பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று
12. மாணவர் பிறப்பு சான்றிதழ்
மேற்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
மனு அளித்த பின்னர் சில நாளில் வீட்டிற்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமிருந்து மனு ஏற்பு கடிதம் வந்த பின்னர் தான், உதவித்தொகை பெற முடியும். எனவே, இந்த கடிதம் மனு கொடுத்த 30 தினங்களுக்குள் வரவில்லை என்றால் மீண்டும் குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகி மனு நிலைமை என்ன?, ஏன் உங்களுக்கு கடிதம் வரவில்லை என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று மனு கொடுத்த பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இதை செய்து கடிதம் வந்தால் தான் உதவித்தொகை கிடைப்பது உறுதி. இல்லையெனில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தில் உதவித் தொகை கிடைகாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ