)
TNAU 2025 admission : 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்கள் மேற்கூறிய பல்கலைக்கழகங்களின் இளமறிவியல் (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) விண்ணப்பிக்க தவறியவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள முகப்பில் இருக்கிறது.
துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள்
* ஏற்கனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் இந்த துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பத்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ஆனால் கலந்தாய்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது. விதிமுறைகளை மீறி விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
* துணைத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* இந்த துணைக்கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கென்று தனிதரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
* பொதுக்கலந்தாய்விற்கு பிறகு பெறப்பெற்ற காலியிடங்கள் இந்த துணைக் கலந்தாய்வின் மூலம் விண்ணப்பித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
* இந்த துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதிக கூட்டு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பொதுக் கலந்தாய்விற்கு பிறகு உருவான காலியிடங்களுக்கு மட்டுமே உரிமை கோர முடியும்.
* இந்த துணைக் கலந்தாய்விற்கு தகவல் கையெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும்.
* இந்த துணைக் கலந்தாய்விற்கு பிறகு உருவாகும் காலியிடங்கள் உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) மூலம் நிரப்பப்படும்.
* இந்த துணைக் கலந்தாய்விற்கு மாணவர்கள் ஏதேனும் தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினாலோ அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
* இந்த இணையதள வாயிலாக பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி 20.08.2025 ஆகும்.
* விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை நீக்க அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகளையும் (உறுப்பு மற்றும் இணைப்பு) வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களையும் அணுகலாம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 9865703537 மற்றும் 9442029913 என்ற அலைபேசி எண்களில் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சலில் (email): ugdmissions@tnau.ac.in மூலமாகவும் வார நாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம் என்று கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ