சென்னை தொல்காப்பிய பூங்காவை பார்க்க விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Chennai Tholkappia Poonga : சென்னை தொல்காப்பிய பூங்காவில் பார்வையிடவும், நடைப்பயிற்சி செய்யவும் விண்ணப்பிப்பது எப்படி, புதிய கட்டணம் எவ்வளவு? என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 23, 2026, 03:18 PM IST
  • சென்னை தொல்காப்பிய பூங்கா அப்டேட்
  • புதிய கட்டணங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை தொல்காப்பிய பூங்காவை பார்க்க விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Chennai Tholkappia Poonga : சென்னையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக வடிவமைத்துள்ள தொல்காப்பிய பூங்காவை பொதுமக்கள் இனி பார்வையிடலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், உரிய கட்டணம் செலுத்தி நடைப்பயிற்சி செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய பூங்காவுக்குள் செல்லவும், வாக்கிங் செல்லவும் புதிய கட்டணங்களுக்கான பட்டியலையும் தமிழ்நாடு அரசு அறிவித்துளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா 24.10.2025 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகள்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது ஓர் அமர்விற்கு 250 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் 365 நாள்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். 

தொல்க்காப்பிய பூங்கா நேரம்

மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்விக்காக கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவ, மாணவியர் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை 9:30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் தவிர) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

சீரமைப்பிற்குப் பிறகு நடைப்பயிற்சிக்காக அனுமதி பெற்றவர்கள் நீங்கலாக 24.10.2025 முதல் இன்றுவரை 6,843 மாணவ, மாணவியரும் 20,233 பொதுமக்களும் பூங்காவைப் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு. மேற்கொண்ட இச்சுற்றுச்சூழல் சீரமைப்பின் விளைவாக அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 549 வகையான உயிரினங்கள் இப்பூங்காவில் உள்ளன.

பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்வு

சீரமைப்பிற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 141 ஆக மட்டுமே இருந்தது. தற்போது. தொல்காப்பியப் பூங்கா நகர்ப்புர ஈரநில உயிரிப் பல்வகைமையின் வாழ்விடமாகத் திகழ்கிறது. சீரமைப்பிற்கு முன்பு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு 1.95 கி.மீ. தூரம் இருந்தது. தற்போது சீரமைப்புக்குப் பின் கூடுதலாக 1.25 கி.மீ வசதி ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 3.20 கி.மீ நடைப்பயிற்சிக்கு தற்போது காலை மற்றும் மாலை இருவேளைகளில் அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டி உள்ளதால், புதியவர்களுக்கு அனுமதி வழங்க இயலாத நிலை உள்ளது. 

ஆனால் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அனைத்துத் தரப்பினருக்கும் இப்போதும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி பெறுவதற்கு பொதுமக்களுக்குத் தடையேதுமில்லை. எனினும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதற்காக, கோரிக்கைகள் அதிகமாக உள்ளதால் கூடுதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது 500 என்ற எண்ணிக்கையில் உள்ள நடைப்பயிற்சி அனுமதியை 1.2.2026 முதல் 3000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

நடைப்பயிற்சி அடையாள அட்டை மூன்று வண்ணங்களில் வழங்கப்படும். ஒவ்வொரு வண்ண அடையாள அட்டை பெற்ற பயனாளிகளும் வாரத்தில் மூன்றுமுறை வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அதற்கான நடைப்பயிற்சி அடையாள அட்டை பெறுவதற்கான திருத்திய கட்டணமாக ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.500/- என்று இருப்பது தற்போது ரூ.250/- ஆகவும், 3 மாதங்களுக்கு ரூ.1500/- என்று இருப்பது ரூ.750/- ஆகவும், 6 மாதங்களுக்கு -2500/- என்று இருப்பது ரூ.1250/- ஆகவும், 12 மாதங்களுக்கு ரூ.5000/- என்று இருப்பது ரூ.2500/ ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு அமர்விலும் 300 பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவினுள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்படுவார்கள். மேலும், நுழைவுசீட்டு முன்பதிவு மற்றும் பிற விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுப் பணி! தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை - முக்கிய தகவல்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News