இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் வாக்குச்சாவடி எந்த பள்ளியில் அல்லது எந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது, உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன போன்ற அனைத்து முக்கிய தகவல்களும் இந்த சீட்டில் தான் இடம் பெற்றிருக்கும். பொதுவாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகளால் வீடு வீடாக சென்று இந்த பூத் ஸ்லிப் வழங்கப்படும். ஒருவேளை உங்களுக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரவில்லை என்றாலோ, அல்லது வெளியூரில் தங்கியிருப்பதாலோ கவலைப்பட தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை மைய இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்."Search in Electoral Roll" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு மூன்று வழிகளில் தேடுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்:
மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுத்து, விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் Captcha எழுத்துகளை சரியாக டைப் செய்து, Search என்ற பட்டனை கிளிக் செய்யவும். ப்போது உங்களது பெயர், வயது, வாக்குச்சாவடி மையத்தின் பெயர் உள்ளிட்ட முழுமையான வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும். அதற்குக் கீழே உள்ள Action காலத்திற்கு நேராக இருக்கும் View Details என்பதை கிளிக் செய்தால், உங்களது முழுமையான வாக்காளர் தகவல் சீட்டு திறக்கப்படும். அந்த பக்கத்தின் கீழே இருக்கும் Print Voter Information என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் பூத் ஸ்லிப்பை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைலில் 'Voter Helpline' என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். செயலியை திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் New Use' என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். ஆப்பின் முகப்பு பக்கத்தில் உள்ள Search Your Name in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதில் Search by Barcode, Search by Details அல்லது Search by EPIC No என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடுவது மிக சிறந்த மற்றும் விரைவான முறையாகும். விவரங்களை உள்ளிட்டு Search கொடுத்ததும், உங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் திரையில் தோன்றும். திரையின் உள்ள Download ஐகானைக் கிளிக் செய்து, அதனை உங்கள் மொபைலில் சேமித்துக்கொள்ளலாம்.
நீங்கள் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்த இந்த ஆன்லைன் பூத் ஸ்லிப், உங்களது வாக்குச்சாவடியை கண்டறிவதற்கும், வரிசை எண்ணை தெரிந்துகொள்வதற்கும் மட்டுமே பயன்படும். இந்த பூத் ஸ்லிப்பை அடையாள சான்றாகக் காட்டி வாக்களிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு மையத்திற்கு செல்லும்போது, நீங்கள் டவுன்லோடு செய்த இந்த பூத் ஸ்லிப் நகலுடன் சேர்த்து, உங்களது அசல் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினலையும் கட்டாயம் கையில் எடுத்து செல்ல வேண்டும்.
1. ஆன்லைனில் பூத் ஸ்லிப் டவுன்லோடு செய்ய எந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற லிங்கில் சென்று உங்கள் பூத் ஸ்லிப்பை எளிதாக டவுன்லோடு செய்யலாம்.
2. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லை என்றால், பூத் ஸ்லிப்பை எப்படித் தேடுவது?
உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், மேற்கண்ட இணையதளத்தில் 'Search by Details' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பெயர், வயது, தந்தை/கணவர் பெயர், மாநிலம், மாவட்டம் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலமும் பூத் ஸ்லிப்பை டவுன்லோடு செய்யலாம்.
3. மொபைல் ஆப் மூலமாகப் பூத் ஸ்லிப் டவுன்லோடு செய்ய முடியுமா?
ஆம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான 'Voter Helpline'-ஐ (Google Play Store அல்லது App Store-ல் கிடைக்கும்) டவுன்லோடு செய்து, அதிலும் உங்கள் வாக்காளர் விவரங்களைத் தேடிப் பூத் ஸ்லிப்பை எடுத்துக்கொள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ