)
Nagapattinam : தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், மீன் உற்பத்தியினை பெருக்கிடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மீனவர்களுக்கு மீன்பிடி வலை, குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செயற்கை கோள் தொலைபேசி மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை ஊக்குவித்திட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மீன்பிடி வலைகள் வாங்கிட மீன்பிடி வலை ஒன்றுக்கு (100 கிலோ கிராம்) மொத்த தொகை ரூ.77,000/-ல் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.30,800/- மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.46,200/- வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் 01 எண்ணம் மற்றும் மகளிர் பிரிவில் 01 எண்ணம் என மொத்தம் 02 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY)2021-22 கீழ் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் (Motor Cycle With Ice Box) வழங்கும் திட்டத்தில் ஒரு அலகின் மொத்த தொகை தொகை ரூ.75,000/-ல் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.30,000/- மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.45,000/- வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் 50 எண்ணம் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவில் 02 எண்ணம் என மொத்தம் 52 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY)2021-22 கீழ் மீன்பிடி விசைபடகு உரிமையாளர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்கும் திட்டத்தில் செயற்கைகோள் தொலைபேசி ஒன்றின் மொத்த தொகை ரூ.1,51,583/-ல் 40% மானியம் அதிகபட்சம் ரூ.40,000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 50 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
எனவே மேற்படி, திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மீனவர்கள் / உள்நாட்டு மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நாகப்பட்டினம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ