)
Cibil Score TN Govt: தமிழகத்தில் சுயதொழில் தொடங்கும் முனைவோர்களுக்கு, சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதை காரணம் காட்டி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு, கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பை பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதாவது MSME துறையின் மூலம், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைஞர் திட்டம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களாக தயாரிப்பதற்கும் இந்த திட்டம் உதவுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 15,023 தொழில்முனைவோர்களுக்கு ரூ.326.74 கோடி மானியத்துடன், ரூ.854.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், கலைகளை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 4,950 நபர்களுக்கு ரூ.17.71 கோடி மானியத்துடன், ரூ.83.66 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த முக்கிய திட்டங்களில், கடந்த 6 மாதங்களாக தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் உதவி வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல் முறை கடன் பெறுபவர்களுக்கு சிபில் ஸ்கோர் பார்க்க தேவையில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனை வங்கிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சிபில் ஸ்கோர் சிறிது குறைவாக இருந்தாலும், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்," என்று அவர் வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், "விண்ணப்பங்களில் ஆவணங்கள் சரியாக இல்லை என்றாலோ அல்லது பயனாளி தொழில் தொடங்க விருப்பம் இல்லை என்று தெரிவித்தாலோ, விண்ணப்பங்களை உடனடியாக நிராகரிக்காமல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வங்கிகள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாமல், பெண்களுக்கு உதவும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், விரைந்து கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த அறிவிப்பு, தொழில் தொடங்க விரும்பும் பலருக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ