SIR படிவத்தை நிரப்ப... 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? - ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Special Intensive Revision: சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2002/2005 - வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தேடும் வசதியை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2025, 06:38 AM IST

    தற்போது கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த நவ. 12ஆம் தேதிவரை 78.09% படிவங்கள் விநியோகம்.

    இப்பணியில் 68,467 வாக்குச்சாவடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SIR படிவத்தை நிரப்ப... 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? - ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Special Intensive Revision In Tamil Nadu: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வருகிறது. வரும் டிசம்பர் 4ஆம் தேதிவரை இந்த திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நவ. 12ஆம் தேதி வரை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, 5 கோடியே 67 ஆயிரத்து 45 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, 78.09% படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்த விநியோகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

SIR In Tamil Nadu: இணையதளம் மூலம் தேடும் வசதி

சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2002/2005 - வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தேடிக் கண்டறிய தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது. இவ்வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் 'பெயர் மூலம் தேடுதல்' அல்லது 'EPIC எண் மூலம் தேடுதல்' என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். "பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்" என குறிப்பிட்டுள்ளது.

SIR In Tamil Nadu:படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்

இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அவை கீழ் வருமாறு:

- வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

- வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.

- உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.

- இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

- வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

- சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும்.

- அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.

தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | சமீபத்தில் வீடு மாற்றியவரா நீங்கள்? வாக்காளர் பட்டியலில் என்ன செய்ய வேண்டும்?

மேலும் படிக்க | தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்!

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் SIR பணிகள்! உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News