Tamil Nadu Rain Forecast Latest News Updates: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
Tamil Nadu Rain Forecast: 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இதைத் தொடர்ந்து தற்போது மதியம் 3.36 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் என 32 மாவட்டங்களில் இன்று மாலை 5.30 மணிக்குள் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Tamil Nadu Rain Forecast: சென்னையில் மழை
தமிழ்நாடு முழுவதும் தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்தும் வருகிறது. தலைநகர் சென்னையை பொருத்தவரை ஈக்காட்டுதாங்கல், மேற்கு மாம்பலம், வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நந்தனம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன கணிப்பு
இதையொட்டி தற்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று மதியம் 3.09 மணிக்கு போட்ட பதிவில், "தமிழ்நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும், சென்னை (KTCC) பகுதியிலும் பஞ்சு முட்டாய் போன்ற அடர்த்தியான மேகங்களை வானத்தில் பார்க்க முடிகிறது. கடல் காற்றும் உள்ளே நகர்கிறது. குறுகிய மற்றும் தீவிரமான மழை இருக்கும். இது வழக்கமாக இருக்கும். தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளிலும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளார்.
Thunderstorms bubbling across Tamil Nadu, Chennai (KTCC) too is seeing overhead developments from the Panju Muttais and the seabreeze moving in. Short and intense spells it will be the pattern.
Some parts of interior TN will get intense thunderstorm too. pic.twitter.com/cgtK3G1aXa
— Tamil Nadu Weatherman (@praddy06) October 5, 2025
Tamil Nadu Rain Forecast: எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?
முன்னதாக, "அக்டோபர் முதல் அமர்களமாக ஆரம்பித்துள்ளது. மீண்டும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, சேலம், நாமக்கல், விருதுநகர் என அனைத்திலும் மழை அதிகமாக பெய்துள்ளது. தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மிக தேவையான மழை பெய்துள்ளது.
Tamil Nadu Rain Forecast: எங்கெல்லாம் மழை பெய்யும்?
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி போன்ற தெற்கு உள்பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி போன்ற உள்பகுதிகளிலும் மழை பெய்யும்.
Thunderstorms bubbling across Tamil Nadu, Chennai (KTCC) too is seeing overhead developments from the Panju Muttais and the seabreeze moving in. Short and intense spells it will be the pattern.
Some parts of interior TN will get intense thunderstorm too. pic.twitter.com/cgtK3G1aXa
— Tamil Nadu Weatherman (@praddy06) October 5, 2025
Tamil Nadu Rain Forecast: இன்றிரவு விடிய விடிய மழை இருக்கு... எங்கெல்லாம்?
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) உள்ளிட்ட மாவட்டங்களின் நிலவரங்கள் நன்றாக இருக்கும். நிறைய பஞ்சு மிட்டாய்கள் போன்ற அடர்ந்த மேகங்கள் காற்றில் மிதக்கின்றன. KTCC பெல்ட்டில் இன்று இரவு முதல் காலை வரை மழையை எதிர்பார்க்கலாம். இந்த போக்கு அக்டோபர் நடுப்பகுதி வரை தொடரும். பின்னர் அக்டோபர் 17-20 தேதிவாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றிரவு விடிய, விடிய மழையை எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | Heavy Rain Alert: தமிழகத்தில் கனமழை: இன்று 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
மேலும் படிக்க |நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
மேலும் படிக்க | தமிழ்நாடு கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









