சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்... உள்ளே சிக்கிய நபர் - பரபரப்பு காட்சிகள்
Chennai Rain Latest News Updates: சென்னையில் கரை புரண்டோடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்க முயன்றபோது கார் அடித்து செல்லப்பட்டது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Chennai Rain Weather Latest News Updates: சென்னை மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம் பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அந்த வகையில், இன்று (டிச. 14) காலை 4 மணி அளவில் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுனில் வர்க்கீஸ் (54) என்ற நபர் தனது சொகுசு காரில் தரைபாலத்தில் கரை புரண்டோடும் ஓடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல், அதை கடக்கும் முயன்றுள்ளார்.
அப்போது கார் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு தடுப்புகளில் இடிபட்டுச் சிக்கியது. இதனால், காரில் சிக்கி உயிருக்கு போராடிய சுனிலை மீட்கும் நடவடிக்கையில் மதுரவாயல் போலீசார் இறங்கினர். அவர்கள் ஜேசிபி உதவியுடன் கயிறு கட்டி காருடன் சேர்த்து வெளியே இழுத்து மீட்டனர்.
ஓட்டுநர் மீட்பு
முன்னதாக, கார் கண்ணாடியைய் உடைத்து போலீசார் வெள்ளத்தில் சிக்கிய சுனில் வர்கீஸை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது அந்த பரபரப்பு காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. குறிப்பாக தரைப்பாலத்தில் இருபுறமும் போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு தடவடிக்கை எடுத்த நிலையிலும், அதிகாலையில் சுனில் காருடன் இந்த தரை பாலத்தை தனது சொகுசு காரில் கடக்க நினைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.