நான் தான் முருகனின் பேரன் - பாஜகவிற்கு சவால் விட்ட சீமான்!

தமிழகத்தில் முருகனை வைத்து அரசியல் செய்துவிடலாம் என்று பாஜகவினர் நினைக்கின்றனர் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் பேட்டி அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 8, 2025, 01:46 PM IST
  • முருகனை வைத்து அரசியல் செய்ய முடியாது.
  • பாஜகவின் கனவு பலிக்காது!
  • புதுக்கோட்டையில் சீமான் பேட்டி.
நான் தான் முருகனின் பேரன் - பாஜகவிற்கு சவால் விட்ட சீமான்!

தமிழகத்தில் முருகனை வைத்து அரசியல் செய்துவிடலாம் என்று பாஜகவினர் நினைக்கின்றனர் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வையாபுரிவில் நடந்த தொழிலதிபரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் தனது பாணியில் சீமான் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வையாபுரி கிராமத்தில் எஸ் எஸ் எல் எஃப் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் சக்திவேல் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா அவரது சொந்த அரசமளை ஊராட்சி வையாபுரி கிராமத்தில் நடைபெற்றது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள்

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசும் போது 2026, 2029, 2032 ஆகிய அனைத்து தேர்தல்களும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள், நான் உளமாற தூக்கி பிடிக்கிறேன். நான் முருகனின் பேரன் நான் எடுப்பதற்கும் அவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பாஜக நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. முருகன் நேற்று வரவில்லை, இவ்வளவு நாள் எடுக்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்? 

இங்கே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பார்க்கிறீர்கள் அந்த ஓட்டை நீங்கள் என்ன தொட்டாலும் வேல் வேல் வெற்றிவேல் என்றால் முருகன் அதன் பிறகு அவன் பேரன் எனக்குத்தான். இந்த மாநாட்டை அரசியலுக்கு நடத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், வேறு எதற்காக நடத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்படி என்றால் அவர்கள் அப்பவே நடத்தி இருக்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் ராமரை தொடுவார்கள் கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள்.

தமிழகத்தில் எங்களுடைய இறையப்பன் முருகனைத் தொட்டு இருக்கிறீர்கள் ஒரிசாவில் பூரி ஜெகநாதரை தொடுவார்கள். இதற்கெல்லாம் ஏமாறுகின்ற கூட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிஜேபியின் அரசியல் மத அரசியல் இல்லாமல் மக்கள் நல அரசியலா அரசியலா செய்கிறார்கள். இந்த அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான் வாய்ப்பில்லை ராஜா என்று பதிலளித்தார்.

மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... உங்களை தேடி வரும் தமிழக அரசு திட்டங்கள் - மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News