)
மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 28.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பதிவாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திருச்சி எம்பி துரை வைகோ திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘அதிமுக (மற்றொரு ) இயக்கத்தில் உள்ள கருத்து குறித்து நான் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது. அதிமுக தலைமையிடம் இந்த கேள்வியை கேட்கவும்.’ என்றார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநீற்றல் அதிகமாக இருக்கிறது இன்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு, ‘அண்ணாமலை சொல்வது உண்மையாக இருப்பது வாய்ப்பு கிடையாது. இந்தியாவில் இடைநிற்றல் இல்லாமல் இருப்பது தமிழ்நாடு தான். கொரோனா தொற்றில் போது அப்போது இருந்தது. இடைநிற்றல் குறித்து அண்ணாமலை சொல்வது தவறானது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தமிழ் மண். பீகார் மட்டுமல்ல ஒரிசா, ஜார்கண்ட் இந்தியாவில் இருக்கும் பின்தங்கிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் உழைக்கிறார்கள், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பங்காற்றுகிறார்கள். இங்கு யாரையும் துன்புறுத்துவது கிடையாது. பீகாரில் வேலை கிடைக்கவில்லை அதனால் தான் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். நம்மால் அவர்களும் பயன் அடைகிறார்கள். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தவறானது. ஜாதி மத அரசியலைக் கடந்து நாட்டின் பிரதமர் செயல்பட வேண்டும். தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கம் திமுக. இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு வன்மம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் இதை சொல்லி இருக்கக் கூடாது.
SIR பொறுத்தவரை பீகாரில் கொண்டு வந்தார்கள் அதில் நிறைய குழப்பம் உள்ளது. உச்ச நீதிமன்றம் அதை தலையிட்டு பல கேள்வியை கேட்டுள்ளது. அதற்கான முழுமையான பதில்கள் இன்னும் வரவில்லை. தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் கொண்டு வருவதற்கு பண்டிகை காலம், வடகிழக்கு பருவமழை, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விடுமுறை காலம் உள்ளது. இது போன்ற நேரத்தில் வீடு பூட்டிய நேரத்தில் ஆள் இல்லை என்று வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
எஸ் ஐ ஆர் பொருத்தவரை பீகாரில் வாக்குரிமை இருந்தும் வாக்கு செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. தகுதியானவர்கள் வாக்குரிமை இழந்து இருக்கிறார்கள். எஸ் ஐ ஆர் அவசர அவசரமாக செய்ய இரண்டு மாதத்தில் செய்ய வேண்டியது தவிர்க்கப்பட வேண்டியது.’ என்றார்.
நடிகர் அஜித்குமார் கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசியதற்கு பதில் அளித்த துரை வைகோ, ‘இதைத்தான் முன்னாடியே நான் சொன்னேன். கரூர் சம்பவம் பொறுத்தவரை ஜனங்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், வரக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதை மீறி மக்கள் வந்திருக்கிறார்கள்.
கர்நாடகா பெங்களூரில் ஐபிஎல் வெற்றி விழாவில் 10 பேர் இறந்தார்கள். உத்திரபிரதேசம் கும்பாபிஷேக விழாவில் 100 பேர் இறந்தார்கள்.
பல்வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் மக்கள் இறக்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். அஜித் அதைத்தான் சொல்லி இருக்கிறார். அஜித் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்.’ என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ