புதுக்கோட்டையில் இந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக ஆட்சியில் கூட சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எந்த அடிப்படை வசதிகளும் எந்த கிராமத்திற்கும் கிடைக்கவில்லை. பிரதி திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்க கூட்டம் மனுக்களை பெற்றுக் கொள்கிறார்களே தவிர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. அனைத்து மாவட்டங்களிலும் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தை தொடங்கி, அதன் மூலமாக இந்து வாக்கு வங்கியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட போகிறோம்.
மேலும் படிங்க: கூச்சமே இல்லாத இபிஎஸ்... இஸ்லாமியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - ஸ்டாலின் பேச்சு
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பி எம் சி திட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக என்று பொய் கூறி மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று ஆட்சி நடத்துவது திமுக அரசு. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியுள்ளது, ஆனால் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது என்று முதன் முதலாக வெளி உலகத்துக்கு கொண்டு வந்தது, திமுக அமைச்சரவையில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தான். இதை வெளிக் கொண்ட காரணத்தினால் தான் அவர நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
இதன் பிறகு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். 2ஜி ஊழலை மிஞ்சும் அளவிற்கு டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக சந்திக்காமல் இதற்கு தடை வேண்டும் என்று கூறி தடை பெற்று விட்டனர், இந்த தடை இடைக்காலமானது மீண்டும் இந்த வழக்கு தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்படும். திமுக அரசை மத்திய அரசு ஏன் இன்னும் டிஸ்மி செய்யவில்லை? எங்களுக்கு இருக்கக்கூடிய வருத்தமே திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யாதது தான். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று இவ்வாறு செய்து வருகின்றனர். ஆனால் இந்திரா காந்தி இருந்திருந்தால் இதுபோன்று திமுக நடந்திருக்க முடியுமா?
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசக்கூடிய திமுகவை முட்டிக்கு முட்டி தட்டி மீண்டும் ஒரு மிஷாவை கொண்டு வந்திருப்பார். தமிழக அரசிற்கு மத்திய அரசு நிதி வழங்கக்கூடாது அந்த நிதியையும் மோசடி செய்து அவர்கள் கணக்கெடுத்து கொண்டு சென்று விடுவார்கள். மக்களுக்கு எந்த விதமான பயனும் இருக்காது, எந்த திட்டத்தையும் மத்திய அரசு நேரடியாக தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு நிதி நேரடியாக மக்களுக்கு போய் சேரும். பொய்யான வாக்குறுதிகளை 21 ஆம் ஆண்டு வழங்கி திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை ஏமாற்றி ஊழல் செய்து வருகிறது.
அயலக அணி என்ற பெயரில் திமுக போதை பொருள் கடத்தலை செய்து வருகிறது. மணிப்பூரில் கிறிஸ்டின் மிஷனரி பிரச்சனையை தூண்டு வருகின்றனர், தற்போது மத்திய அரசு பிரச்சனையை சீர் செய்து வருகிறது. திராவிட மாடல் இன்னும் உள்ளது என்று பொய் கூறி வருகின்றனோ, அதே போன்று இல்லாத தொகுதி மறுப்பு சீரமைப்பு குறித்து தற்போது பிரச்சனைகள் செய்து வருகின்றனர். கோயில்களில் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாததால் இதுவரை தரிசனம் செய்ய வந்த மூன்று பக்தர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும், சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உடனடியாக அறிவித்த முதல்வர் சாமி தரிசனம் செய்ய வந்த இந்துக்கள் அறநிலையத்துறை முறையாக செயல்படாததால் இறப்பிற்கு முதல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ