திருச்செங்கோட்டில் மதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய மதிமுக நிர்வாகி மனோகர் “ மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை தலைவர் போல் சித்தரித்ததும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததும் மதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை கேட்ட வைகோ கோபமாக அவரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி “இப்படி பேசுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. தேமுதிக,  திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக கோடிக்கணக்கில் பணமும், ஏராளமான தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டது. ஆனால், விஜயகாந்த் அதையெல்லாம் விட்டுவிட்டு, குறைந்த வாக்கு வங்கி கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன்  இணைந்தார். அவர் மட்டும் திமுகவில் இணைந்திருந்தால், தேமுதிக 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். திமுகவும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.  விஜயகாந்தால் நாம் தோற்கவில்லை. எனவே இதுபோல் பேசக்கூடாது” என்று கடிந்து கொண்டார்.


வைகோ இப்படி பேசியிருப்பது தேமுதிக தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.