இன்னும் முடியல.. மழை பெய்யும்! எங்கெல்லாம்? சென்னையில் வானிலை எப்படி?

Tn Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Dec 11, 2025, 03:25 PM IST
  • அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் எப்படி?
  • வானிலை மையம் அறிவிப்பு
இன்னும் முடியல.. மழை பெய்யும்! எங்கெல்லாம்? சென்னையில் வானிலை எப்படி?

IMD Rain Alert: தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் டித்வா புயல் காரணமாக நல்ல மழை பெய்தது. வட மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் என கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே மழை பதிவானது. இதையடுத்து டித்வா புயல் வலுவிழந்த நிலையில், படிப்படியாக மழை குறைந்து கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையாக உள்ளது. ஆனால் பணியானது வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (11-12-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை (12-12-2025) தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

13-12-2025 மற்றும் 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

15-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

16-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 11-12-2025 முதல் 13-12-2025: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 11-12-2025 முதல் ល់ 13-12-2025: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

Chennai Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (11-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (12-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

மேலும் படிக்க: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள்.. அரசு முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News