மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே

Tamil Nadu Electricity Board Important Announcement : தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 3, 2025, 11:22 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • மின்துறை சார்ந்த புகார்கள் உள்ளதா?
  • ஏப்ரல் 5 தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்
மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே

Important Announcement by Tamil Nadu Electricity Board : கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு மின்சாரத்துறை, மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் போக்க சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு மின்சாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தமிழ்நாடு முழுவதும் வரும் 5 ஆம் தேதி மின்சாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமின்போது மக்கள் மின் கட்டணத்தொகை, குறைந்த மின்னழுத்தம், மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட புகார்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு

இது தொடர்பான மின்சாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,  தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறைதீர் முகாம்  - பொதுமக்களுக்கான வாய்ப்பு

அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பை தேவைப்படும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக இருக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கையும் மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் தீர்வு கிடைக்கக்கூடிய இந்த  வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். 

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு - தவறவிடாதீங்க..!

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்...! இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் மற்றும் பயிற்சி பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News