)
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதால் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு அனுமதி என்று வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகை ரசிக்கவும், மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல பேரிஜம் ஏரி , மதி கெட்டான் சோலை, பயர் வாட்சிங் டவர், தொப்பி தூக்கி பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்நிலையில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். மேலும் இந்த சுற்றுலா தலங்களின் அருகிலும், இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையிலும் 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இதனையடுத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்ததை தொடர்ந்து, இன்று காலை வேளையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ