புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு..! வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜனவரி மாதத்திற்கு பிறகு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 50,000 பேருக்கு ஏற்கனவே ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 19, 2026, 03:45 PM IST
  • புதிய ரேஷன் கார்டு!
  • தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
  • விண்ணப்பிப்பது எப்படி?
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு..! வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ரேஷனில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவது தொடங்கி, அரசின் சலுகைகளை பெறுவதற்கும், நலத்திட்டங்களை பெறுவதற்கும் அடிப்படை ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. மழை, வெள்ளம் போன்ற காலகட்டங்களில் மக்களுக்கு நிதி உதவிகள் ரேஷன் கார்டு மூலமே வழங்கப்படுகிறது. சமீபத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதத்தில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 3000 ரொக்க பணம் வழங்கப்பட்டது. இதுபோன்ற பல திட்டங்களுக்கு ரேஷன் கார்டு பயன்படுவதால், இதற்கு விண்ணப்பிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

அமைச்சர் கொடுத்த விளக்கம் 

தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில், புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்திற்கு பிறகு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 50,000 பேருக்கு ஏற்கனவே ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவர்களில் தகுதியான குடும்பங்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இது ரேஷன் கார்டுகளுக்காக காத்திருந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் முகாம்கள்? 

ரேஷன் கார்டு தொடர்பாக குறை தீர்ப்பு முகாம்கள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைதீர்வு முகாமல் நடைபெற உள்ளன. ஜனவரி பத்தாம் தேதி நடைபெற இருந்த இந்த முகாம்கள் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறை தீர்வு முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கவும் அல்லது நீக்கவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். சமீபத்தில் வீடு மாறியவர்கள் தங்களது முகவர்களை மாற்றிக் கொள்ளலாம். மேலும் ரேஷன் கார்டில் உள்ள பெயர் அல்லது வயதில் வறுகள் இருந்தால் அதனையும் திருத்திக் கொள்ள முடியும். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் தாயுமானவர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்

  • குண்டுகுளம்
  • கடல்மங்கலம்
  • ஆற்பாக்கம்
  • சந்தவேலூர்
  • வழுதலம்பேடு

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
  • முதலில் www.tnpds.gov.in என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் உள்ள "மின்னணு அட்டை விண்ணப்பிக்க" என்ற சேவையை தேர்ந்தெடுக்கவும்.
  • குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  • ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும்.
  • இந்த எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க: குடித்துவிட்டு ஆடும் நடிகர்கள்... 'அரசியலில் என்ன செய்யப்போகிறார்கள்' - விஜய் மீது அதிமுக அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News