சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் ஒரு கனவாக இருந்து வருகிறது, குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு சொந்த வீடு வாங்குவது ஒரு வாழ்நாள் கனவாகவே இருந்து வருகிறது. பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கி வந்தாலும் பலராலும் அதனை பெற முடியவில்லை. இதற்கு அவர்களின் மாத வருமானம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. சொந்த ஊர்களில் சொந்தமாக வீடு மற்றும் தோட்டங்கள் இருப்பினும் வேலைக்கு வந்த ஊர்களில் பலரும் வாடகை வீட்டில் தான் இருந்து வருகின்றனர். வெளியூர்களில் வாடகை வீட்டில் இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான். ஏனெனில் அலுவலகங்களுக்கு அருகில் வீடுகளை பார்த்து குடி ஏறலாம். தேவையில்லை என்றால் உடனடியாக வீட்டை காலி செய்து வேறு ஒரு ஏரியாவிற்கு மாறிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | 'பாஜக ஆட்சி அமைக்க இது சரியான நேரமில்லை...' நயினார் நாகேந்திரன் மதுரையில் பேச்சு!
இருப்பினும் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டின் உரிமையாளருடன் நல்ல ஒரு நட்பு இருந்தால் அனைத்தும் சுமூகமாக இருக்கும், ஒருவேளை வீட்டின் உரிமையாளருடன் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அவர் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லுவார்கள். இதனால் பல மன கஷ்டங்களும், பணக்கஷ்டமும் ஏற்படும். பொதுவாக நகர்ப்புறங்களில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வீட்டின் உரிமையாளர் குடியிருப்பவர்களை இருக்க விடுவதில்லை, அதற்கு மேல் சென்றால் உடனடியாக காலி செய்ய சொல்கின்றனர். ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை குடி வைக்கின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற நகர் புறங்களில் வீட்டு உரிமையாளர்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாக குடி இருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் பெங்களூரில் ஒரு வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் இருந்து ரூ. 82,000 கழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை மிகவும் மன வருத்தத்துடன் அந்த வீட்டில் குடியிருந்தவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாவில் 2 BHK அப்பார்ட்மெண்டில் குடியிருந்துள்ளார், வீட்டிற்கு அட்வான்ஸ் தொகையாக 1.5 லட்சம் கொடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளரிடம் இரண்டு வருடங்களில் அதிகமாக பேசியதில்லை என்றும், அந்த அப்பார்ட்மெண்டின் மேலாளருடன் மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 13 வது மாடியில் இருப்பதால் அவ்வப்போது வீட்டில் ஏற்படும் பழுது வேலைகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் மாற்றுவது போன்றவற்றை தனது சொந்த செலவில் செய்துள்ளார்.
இதற்காக வீட்டின் உரிமையாளருக்கு பில் கொடுத்த போதிலும் அவர் அதற்கான தொகையை கழிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை காலி செய்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டை சுத்தம் செய்ய மற்றும் பெயிண்ட் அடிக்க 55,000 ரூபாயையும், வீட்டின் பராமரிப்பு செலவுக்காக ரூபாய் 25,000 பிடித்து விட்டு 1.5 லட்சம் அட்வான்ஸ் தொகையில் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையதில் வைரலாகி பலரும் அந்த வீட்டின் உரிமையாளரை திட்டி வருகின்றனர். பெங்களூரில் மட்டுமல்லாமல் சென்னையிலும் இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் அட்வான்ஸ் தொகை கொடுக்கும் முன்பு வீட்டு உரிமையாளரிடம் அனைத்து விசயங்களையும் பேசிக்கொள்வது நல்லது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ