)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பணியில் சேர காத்திருக்கும் 1000க்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. குரூப் 2 தேர்வின் முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இன்னும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கலந்தாய்வில் நேர்முகத் தேர்வுடன் குரூப் 2 பதவிகளுக்கு மற்றும் நேர்முக தேர்வு இல்லாத குரூப் 2ஏ பதவிகளுக்கு என தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் மற்றும் முழு விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
கடந்த முறை இல்லாத வகையில், இந்த முறை TNPSC தேர்வாணையம் தேர்வர்களுக்கு அழைப்பாணை அனுப்பும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அழைப்பாணை மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் மட்டுமே அனுப்பப்படும். மேலும் இந்த முறை தபால் மூலம் தனித்தனியாக அழைப்பாணை அனுப்பப்பட மாட்டாது என்று தேர்வாணையம் உறுதியாக அறிவித்துள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தவறான எண் அல்லது செயல்படாத மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதற்கு தேர்வர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கலந்தாய்விற்கான அழைப்பாணை கிடைத்தவுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் உங்களது அனைத்து அசல் சான்றிதழ்களும் அவற்றின் நகல்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் TNPSC அலுவலகத்தில் நேரில் சென்று சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகே, கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வின் மூலம், பல்வேறு அரசு துறைகளில் இன்னும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே அனைத்து ஆவணங்களையும் கவனமாக கையாள்வது அவசியம்.
எப்படியாவது அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் பல இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும். எனவே தேர்வர்கள் தங்களது மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆக்டிவாக வைத்து கொள்ளும் படியும், தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ