தென்பெண்ணை பாலாறு இணைப்பை நான் இருக்கும் போதே செய்து விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னுடைய காலத்திலேயே பாலாற்றில் தண்ணீர் விட்டு விட வேண்டும் என ஆசை. அதுவரை எனக்கு சக்தியும் பலமும் இருக்க வேண்டும் நினைக்கிறேன் என்று கே.வி.குப்பத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் மேலூர் முதல் திருமணி வரை எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள கொட்டாற்றினை 9.70 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி புனரமைத்து குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை புனரமைத்து மற்றும் புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் லப்பை கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க | அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு போட்ட முக்கிய உத்தரவு
இதில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பாலத்தை அர்பணித்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கினார். முன்னதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தொகுதி பிரித்ததால் காட்பாடியிலேயே நிலையாக நிற்க வேண்டிய சூழல் உருவானது ஓட்டு உறவு இல்லாவிட்டாலும், ஒற்றுமை உறவு உள்ளது. நான் நிற்க்கா விட்டாலும் எனது பையனை எம்.பி நிற்க வைத்துள்ளேன். எனக்கு ஒரு பெரிய ஆசை, ஆனால் இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. தென்பெண்ணை பாலாற்றை இணைக்க வேண்டும் என்பது தான் அது. இதை செய்தால் விழுப்புரம், கடலூருக்கு பாதிப்பு வரும் என அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

ஆகையால் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர், நாட்றம்பள்ளி வழியாக பாலாற்றில் நீரை கொண்டு வந்து விட வேண்டும் என ஆசை. என்னுடைய காலத்திலேயே பாலாற்றில் தண்ணீர் விட்டு விட வேண்டும் என ஆசை. அதுவரை எனக்கு சக்தியும் பலமும் இருக்க வேண்டும் நினைக்கிறேன். இந்த ஆட்சி அமைந்த போது உங்களுக்கு என்ன இலக்க வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என முதல்வர் கூறினார். எனக்கு நீர்வளம் தான் வேண்டும் அது தான் விவசாயிகளோடு தொடர்புடைய துறை என முதல்வரிடம் அடித்து இந்த துறையை வாங்கினேன். எப்படியாவது இந்த முறை காவேரி நீரை கொண்டுவர என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன்.
இந்த மாவட்டத்துக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும். ஆனால் அதிக வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது. அதனால் அடுத்த தேர்தலில் எல்லாம் செய்து கொடுக்கப்படும். அது எப்படி என கேட்கிறீர்களா? அடுத்த தேர்தலிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம். நினைத்து பாருங்கள் ஒவ்வொன்றாக. காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை, கல்லூரி மாணவர்களுக்கத்தொகை என பல திட்டங்களை செய்துள்ளோம் என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









