500 ரூபாய் நோட்டுக்கட்டை தூக்கி கொண்டு ஓடிய குரங்கு! வைரல் வீடியோ!

கர்நாடக சுற்றுலா பயணியின் 500 ரூபாய் கட்டை தூக்கி சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்த குரங்கு ஒன்று, ரூபாய் நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கீழே தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Jun 15, 2025, 05:36 PM IST
  • கொடைக்கானல் குணா குகை.
  • சுற்றுலாப்பயணிகளை மிரட்டும் குரங்குகள்.
  • வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
500 ரூபாய் நோட்டுக்கட்டை தூக்கி கொண்டு ஓடிய குரங்கு! வைரல் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாதலமாக உள்ள குணா குகை அனைவரையும் கவரும் இடமாகவும் இருப்பதால் மற்ற சுற்றுலா தலங்களைவிட, இந்த சுற்றுலா தலத்திற்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தந்தையர் தினத்தில்... ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி - உருக்கமாக பேச்சு!

இந்நிலையில் இந்த குணா குகை சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கைப்பைகளையும், உணவு பொருட்களையும் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் உள்ள குரங்குகள் பறித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனையடுத்து இந்த சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த கர்நாடக சுற்றுலாப் பயணியின் கைப்பையை பிடுங்கி சென்று, அதில் இருந்த 500ரூபாய் நோட்டுகளை எடுத்து மரத்தின்  உச்சிக்கு சென்று, ரூபாய் நோட்டை ஒன்றன்பின் ஒன்றாக கீழே போட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கீழே போட்ட ரூபாய் நோட்டுகளை கர்நாடகா சுற்றுலாப் பயணிகள் சேகரித்து 500 ரூபாய் நோட்டு கட்டினை மீட்டனர், இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள்  கொண்டு சென்று விட  வேண்டும் என சுற்றுலாப் பயணிகளிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News