Selvaperunthagai vs Annamalai: ராகுல் காந்தி நிகழ்வில் பங்கேற்க கூடாது என்பதற்காக வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தன்னை சிறைபிடித்ததாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டிய நிலையில், ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால் அதை மறக்கவே இந்த நாடகம் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

TN Assembly Election 2026, Selvaperunthagai vs Annamalai: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் பரப்புரை நாளை (ஏப்ரல் 21) மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. இந்தச் சூழலில், முக்கிய தலைவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவருமான ராகுல் காந்தி இன்று தென்மாவட்டங்களில் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை.
அப்படியிருக்க, செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தன்னை வீட்டில் சிறைப்பிடித்திருப்பதாகவும் X பதிவில் தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகையின் அந்த பதிவில், "ராகுல் காந்தி ஒரு முக்கிய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான இன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்திய பேசும் அதிகாரிகளுடன் சேர்ந்து, சோதனை என்ற போர்வையில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக சிறைபிடித்தனர்.
இதன் விளைவாக, எனது அரசியல் கடமைகளை ஆற்றுவதில் இருந்தும் மக்களுடன் கலந்துரையாடுவதில் இருந்தும் நான் தடுக்கப்பட்டேன். அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்க ஒரு தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டமிட்ட செயல். ஜனநாயகத்தின் செயல்பாடுகளை தடுப்பதற்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்குமான திட்டமிட்ட முயற்சியாகும்.
As Shri. @RahulGandhi Ji arrives in Tamil Nadu today to undertake a crucial election campaign, the Income Tax Department with the hindi speaking officials as, under the pretext of a ‘search’, unlawfully confined me within the Sriperumbudur Assembly Constituency, effectively…
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 20, 2026
இந்த சோதனையின் நேரம், அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. அது சட்டத்தை அமல்படுத்துவதல்ல, மாறாக அச்சுறுத்துவதே ஆகும் இது. எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கும் அரசியல் பங்கேற்பைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே அச்ச சூழலை உருவாக்குவதற்கும், மத்திய அமைப்புகளை அரசியல் அழுத்தக் கருவிகளாகப் பயன்படுத்தும் ஒரு கவலைக்குரிய போக்கு பிரதிபலிக்கிறது" என குற்றஞ்சாட்டினார்.
அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம், சுதந்திரமான நடமாட்டம், பேச்சுரிமை மற்றும் நியாயமான அரசியல் ஈடுபாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீதான தாக்குதலாகும்.
சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் நம்பிக்கையை குலைத்து, நமது ஜனநாயக அமைப்பின் நேர்மையைச் சிதைக்கிறது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் இதுபோன்ற முயற்சிகளை உறுதியாக எதிர்த்து நிற்பேன் என்ற எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நீதி, நேர்மை, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களை காப்பதற்கும் உள்ள நமது கடமையில் இருந்து எந்தவொரு அச்சுறுத்தலும் நம்மைத் தடுக்க முடியாது" என்றார்.
இந்த பதிவுக்கு பின் சிலமணிநேரங்களிலேயே செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் பதிவிட்டார். அவரது X பதிவில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களது பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்" என பதிவிட்டிருந்தார்.
மேலும், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பாஜக அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இந்தச் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் தாங்கள் சோதனை எதுவும் நடத்தவில்லை என்றும் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என்றும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மையல்ல என வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு சம்பவம் குறித்து தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது X தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, திரு. ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், திரு. ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம்… https://t.co/yfZatVFEom pic.twitter.com/B6SRUPFb6G
— K.Annamalai (@annamalai_k) April 20, 2026
செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார்.
இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில் இருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்?" என திமுக - காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக சாடி உள்ளார்.
ராகுல் காந்தியின் கூட்டத்தில் பங்கேற்க செல்வப்பெருந்தகைக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில், செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு குறித்து ராகுல் காந்தியும் அவரது பரப்புரையில் குறிப்பிட்டு பேசவில்லை. எனவே, செல்வப்பெருந்தகை நடத்திய நாடகம்தான் வருமான வரித்துறை ரெய்டா...? என பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ