)
Independence Day 2025 CM Stalin Speech : ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று, 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு:
வ.உ.சி மறைந்த நாள் தியாகத் திருநாளாக கடைப்பிடிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முன்னாள் முதல்வரும் தந்தையுமான கலைஞர் மு.கருணாநிதி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். விடுதலை போராட்ட தியாகிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் உரையாற்றினார்.
ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு:
முதல்வர் ஸ்டாலின், மாநில அரசு விடுதலை போராட்ட வீரர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதிய தொகை 22,000 உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார். மேலும், மாநில அரசு விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம், ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள்ம், ராமநாதபுரம் முன்னாள் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாதன் சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருத சகோதரர்கள் வழி தோன்றல்கள் மற்றும் வா.உ.சி வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
2ஆம் உலகப்போரில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டு பேசினார். அதே இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் மனைவிகள் (கைம்பெண்களுக்கு) வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவியானது 8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வசதிக்காக, ரு.22 கோடி மதிப்பீர்ட்டில், 33,000 சதுர அடி பரப்பளவில் மாதவரத்தில் உட்கட்டமைப்புகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
விருது வழங்குதல்:
சுதந்திர தின விழாவில், தமிழ்நாட்டுக்கும் தமிழின வளர்ச்சிக்கும் தொண்டாற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்கிற விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பேராசியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
அறிவியில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டது. இதைத்தாண்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டது. இதில், முதல்வரின் நல் ஆளுமை விருதும் அடக்கம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ