ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254..! கைவிரித்த அரசு... கலங்கி நிற்கும் மக்கள்..!
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து, குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் சூழலால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 முதல் 130 அமெரிக்க டாலர் வரை விற்பனை ஆகி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254-க்கு விற்பனையாகும் நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல் விலை வரும் நாட்களில் உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் உயர்ந்து 254 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்ந்து 176 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை சிலோன் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஜிடிபி மதிப்பு -16.3% உள்ளதால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் எக்கச்சக்கமாக உயர, இலங்கை அரசோ பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கைவிரித்து விட்டது.
மேலும் படிக்க | பாஜகவினர் மீது காரில் வந்து மோதிய எதிர்கட்சி எம்எல்ஏ; 20க்கும் மேற்பட்டோர் காயம்
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பல்வேறு நாடுகளும் தவித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து, குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் எரிப்பொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படலாம். சமீபத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
தற்போது 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகே இதுவரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஆனால் உக்ரைன் - ரஷ்யா போரால் தற்போது எரிப்பொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்துமா அல்லது வேறேதும் வழியை கையாண்டு பொதுமக்கள் சுமையை மேலும் அதிகரிக்காமல் தடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR