)
India Today - CVoter இணைந்து நடத்திய Mood Of The Nation (தேசத்தின் மனநிலை) என்ற கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. இதன்கீழ், தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றிருந்தால் அதில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்ற ரீதியில் நடந்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியே மொத்தமாக வென்றது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை முறித்து தனித்து தேர்தலை சந்தித்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்தச் சூழலில், India Today - CVoter இந்த ஆகஸ்ட் மாதத்தில் மக்களவை தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு என மேற்கொண்டு கருத்துக்கணிப்பின் முடிவிலும் ஆளும் திமுகவுக்குதான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், திமுக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்பு முடிவின்படி, திமுக 39 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், கருத்துக்கணிப்பு முடிவின் கீழ், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை விஜய் அதிகளவு பிரிப்பதால், அது திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
India Today - CVoter Mood Of The Nation கருத்துக்கணிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியில் மொத்தம் 54,788 வாக்காளர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளனர். கூடுதலாக, CVoter-இன் வழக்கமான தரவுகளில் 1,52,038 பேர் நேர்காணல் அளித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 826 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதமும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 39 தொகுதிகளையும் திமுகவே வென்றதாக முடிவுகள் வெளிவந்தன. ஆனால் தற்போது நிலை சற்று மாறி உள்ளது. பாஜகவும் அதிமுகவும் தற்போது இணைந்துவிட்டது. விஜய்யும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார். இதனால், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்துகிறது.
கருத்துக்கணிப்பு முடிவின்படி, இந்தியா கூட்டணியின் வாக்கு சதவிதம் என்பது கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பை விட குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி கருத்துக்கணிப்பில் திமுகவின் இந்தியா கூட்டணி 52% வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது அது 48% ஆக குறைந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 47% வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை, கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 18% வாக்குகளை பெற்றது. கடந்த பிப்ரவரியில் 21% வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், ஒருவேளை தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 37% வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்ததும் 16% வாக்குகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய்யின் அரசியல் வருகையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திமுகவின் இந்தியா கூட்டணி 36 தொகுதிகளையும், பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. திமுகவுக்கு எதிரான வாக்குகள் நேரடியாக பாஜக - அதிமுக கூட்டணிக்கு செல்லாமல், விஜய்யின் தவெகவிற்கும் சிதறுவது திமுகவுக்குதான் சாதகம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ