)
Indian Army Recruitment Tamil Nadu : நாகப்பட்டினத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது. திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், நாகப்பட்டினத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் 18 செப்டம்பர் 2025 முதல் 27 செப்டம்பர் 2025 வரை அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிகல், அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10வது தேர்ச்சி மற்றும் அக்னிவீர டிரேட்ஸ்மேன் 8வது தேர்ச்சி பிரிவுகள் சேர்வதற்கு அக்னிவீர ஆட்சேர்ப்பு முகாமை நடத்த உள்ளது.
திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) சேர்ந்த தேர்ச்சியாளர்கள், www.joinindianarmy.nic.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் 11, 2025 தேதியிட்ட ஆட்சேர்ப்பு திரளணி அறிவிப்பின்படி, அனைத்து ஆவணங்களையும் ஆட்சேர்ப்பு திரளணி தளத்திற்கு கட்டாயமாக கொண்டு வர வேண்டும். ஆவணங்களின் அமைப்பு அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் தவறான அமைப்பில் (குறிப்பாக பிரமாணப் பத்திரம்) முகாமிற்கு வரும் எந்தவொரு தேர்ச்சியாளரும் ஆட்சேர்ப்பு திரளணியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அக்னிவீர முகாமில் (அனைத்து பிரிவுகளும்) கலந்துகொள்ளும் தேர்ச்சியாளர்களின் மாவட்ட வாரியான விபரம்:-
18-09-2025 - அன்று நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்).
19-09-2025 - தூத்துக்குடி,
20-09-2025 - கன்னியாகுமரி.
21-09-2025 - கரூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை.
22-09-2025 - சிவகங்கை மற்றும் திருநெல்வேலி.
23-09-2025 - தென்காசி மற்றும் திருநெல்வேலி.
24-09-2025 - விருதுநகர், தென்காசி. 25-09-2025 அன்று விருதுநகர்,
முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் ஆட்சேர்ப்பு திரளணி நடைபெறும் இடத்தில் ஆஜராக
வேண்டும். ஆட்சேர்ப்பு திரளணியில் பங்கேற்கும் சீக்கிய தேர்வர்களைத் தவிர, னையோர் தங்களது தலைமுடியினை போலீஸ் கட் செய்தும், தாடியினை முழுவதுமாக மழித்தும் இருத்தல் வேண்டும். தாடியுடன் இருக்கும் நபர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் ஓட்டம் மற்றும் உடல் பரிசோதனைகளுக்கு நீர் சத்து குறையாமல் இருக்க, நிறைய தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட, இயாயமான மற்றும் வெளிப்படையானது. யாரையாவது தேர்ச்சி பெற அல்லது இராணுவத்தில் சேர உதவ முடியும் என்று கூறி மோசடி செய்பவர்களிடமிருந்து தேர்ச்சியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு மற்றும் முயற்சி மட்டுமே அவர்களின் தேர்வை தகுதிக்கு ஏற்ப உறுதி செய்யும். மோசடியாளர்கள் மற்றும் முகவர்களுக்கு (Agents) எந்த பங்கும் இல்லை, மேலும் தேர்ச்சியாளர்கள் அத்தகைய மோசடியாளர்கள் மற்றும் முகவர்கள் முகமைகளால் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ