8 ஆம் வகுப்பு தேர்ச்சி... ராணுவத்தில் வேலை - ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!!

Indian Army Recruitment : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ராணுவத்தில் வேலை செய்யும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 5, 2025, 07:43 AM IST
  • இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு
  • ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
  • நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
8 ஆம் வகுப்பு தேர்ச்சி... ராணுவத்தில் வேலை - ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!!

Indian Army Recruitment : ராணுவத்தில் வேலை செய்ய பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட ராணுவத்தில் சேர முடியும். அதுவும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காகவே இந்த அறிவிப்பு பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

இந்திய இராணுவத்தில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அக்னிவீரர் பொதுபணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னி வீரர் எழுத்தர்/ கிடங்கு மேலாளர், அக்னிவீரர் தொழிலாளி (10ம்வகுப்புதேர்ச்சி) அக்னிவீரர் தொழிலாளி (8ம்வகுப்புதேர்ச்சி) ஆகிய பணிகளுக்கு, கோயமுத்தூர், திருப்பத்தூர். சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்விற்கு 12.03.2025 முதல் 10.04.2025 வரை ஆன்லைனில்www.joinindianarmy.nicin என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இரண்டு பிரிவுகளுக்கும்
விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 16 கிமீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. NCC, ITI Polytechnic முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு ( Common Entrance Exam) நடைபெறும். அதன் பின்னர் ஆட்சேர்ப்புமுகாம் (Recruitment Rally) நடத்தப்படும்.

தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். இது முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது. மேலும் விவரங்களுக்கு 044-25674924 தொலைபேசியினை தொடர்புகொள்ளலாம். இவ்வாய்ப்பினை தகுதியும், திறமையும் வாய்ந்த திருமணம் ஆகாத ஆண்/பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

அக்னிவீர் திட்டத்தில் சேர கல்வித் தகுதி : 8 மற்றும் 10, ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். என்சிசி, பாலிடெக்னிக், ஐடிஐ முடித்தவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு - தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும். ஒட்டத் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு எப்போது நடைபெறுகிறது? - தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஏப்ரல் 12ம் தேதி முக்கிய நாள்!

மேலும் படிக்க | ஆதாரைப் போல் அறிமுகமான தேசிய அடையாள எண்..!! யாரெல்லாம் கட்டாயம் பெற வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News