)
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. AI தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் வரும் காலத்தில் வேலை இருக்குமா? இருக்காதா? என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு இல்லாமல், நேர்முக தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள தகுதியான இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 36 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டு பதவிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
உதவி தொழில்நுட்ப மேலாளர்
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electronics, Electronics & Communications, Electrical, Electrical & Electronics, Computer Science,அல்லது Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை தொழில்நுட்ப மேலாளர்
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
கல்வி தகுதி: உதவி தொழில்நுட்ப மேலாளர் பதவிக்குக் கோரப்பட்டுள்ள அதே கல்வித் தகுதிகள் இந்தபதவிக்கும் பொருந்தும்.
இந்த வேலைக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.400 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பின் முக்கிய சிறப்பம்சமே, இதற்கு எந்தவித எழுத்து தேர்வு எதுவும் கிடையாது என்பது தான். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை, ஆவணங்கள் சரிபார்ப், நேர்முக தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தரம் பிரிக்கப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பம் தொடங்கிய நாள் ஆகஸ்ட் 26 ஆகும். மேலும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், NHSRCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nhsrcl.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அனைத்துதகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ