சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்! சர்பிரைஸ் கொடுத்த நிர்வாகம்!

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தினத்தில் சென்னையில் உள்ள மெட்ரோவில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 17, 2025, 08:51 AM IST
  • மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம்.
  • மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பு.
  • ஐபிஎல் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.
சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்! சர்பிரைஸ் கொடுத்த நிர்வாகம்!

இந்தியாவின் பரபரப்பான பெருநகரமான சென்னை அதன் துடிப்பான கலாச்சாரம், வரலாற்று அடையாளங்களுக்கு பெயர் பெற்று இருந்தது. ஆனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக, அதன் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு புகழ் பெற்றுள்ளது. காலை தொடங்கி இரவு வரை சென்னையில் ஒரு இடத்திற்கு செல்வது மிகப்பெரிய சோதனையாகவே உள்ளது. அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வருவதற்கு கூட பல மணி நேரங்கள் ஆகும் அளவிற்கு போக்குவரத்துக்கு நெரிசல் உள்ளது. இத்தகைய போக்குவரத்து சிக்கலை தீர்க்கும் ஒரு அம்சமாக சென்னை மெட்ரோ ரயில் உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: IPL 2025: சிஎஸ்கே அணியின் பெரிய ஆயுதம் யார் தெரியுமா? தோனி, பதிரானா இல்லை!

இலவச பயணம்

இதன் மூலம் ஈர்க்கக்கூடிய பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் உள்ள கூட்ட நெரிசலைக் கணிசமாகக் குறைப்பது மட்டுமின்றி, மக்களுக்கு விரைவான போக்குவரத்து விருப்பங்களையும் மெட்ரோ வழங்குகிறது. இந்நிலையில், பொதுமக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, சென்னை மெட்ரோ ரயில் ஒரு அற்புதமான திட்டத்தை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை காண வரும் ரசிகர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியுடன், மெட்ரோ கார்ப்பரேஷன் இணைந்து ஐபிஎல் 2025 போட்டிகளுக்காக எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்திற்குச் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயண முயற்சியின் துவக்கம், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அதிக நன்மை பயக்க உள்ளது. ஏனெனில் சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் சமயத்தில் அதிக போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும். சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, பார்க்கிங்கிற்கு இடம் இல்லாமல் பலரும் அவஸ்திப்படுவார்கள். மெட்ரோவில் இலவச பயணம் மூலம் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் இருக்கும். மேலும் போட்டிகளுக்குப் பிறகு வீடு திரும்பும் ரசிகர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வழியையும் இது  உருவாக்குகிறது.

மெட்ரோ மட்டும் இன்றி சென்னையில் உள்ள பேருந்துகளிலும் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளும் ஏற்பாட்டையும் சென்னை அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் போதும் அன்றைய தினம் முழுவதும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மார்ச் 23ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையட உள்ளனர்.

மேலும் படிங்க: IPL 2025: ஓய்வுபெறும் இந்த 5 வீரர்கள்... இதுதான் கடைசி ஐபிஎல் தொடர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News